search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் அடித்துக்கொலை"

    ஆந்திராவில் நகை பறித்த சென்னை வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    திருப்பதி, விநாயகர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர், வியாபாரி. இவரது மனைவி அனுராதா. இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர எல்லையான புதுக்குப்பம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 15 பேர் கும்பல் திடீரென பாஸ்கரையும், அனுராதாவையும் வழி மறித்தனர். அவர்கள் அனுராதா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து தப்பினர்.

    பின்னர் கொள்ளை கும்பல் சத்யவேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது என்.எம்.கண்டிகையில் மொபட்டில் வந்த ஆசிரியர் ஜெயஸ்ரீ என்பவரையும் வழிமறித்து 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    இதற்கிடையே நகையை பறிகொடுத்த பாஸ்கரும், அனுராதாவும் கொள்ளை கும்பல் குறித்து சத்யவேட்டில் திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சத்யவேட்டில் திரண்டனர். அந்த நேரத்தில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரை மடக்கி பிடித்தனர். 8 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 7 பேரையும் பொது மக்கள் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் களை சத்யவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் செங்குன்றம் கிராண்ட்லைன் பகுதியை சேர்ந்த ராஜி (24) மற்றும் ஆந்திராவை சேர்ந்த அவரது கூட்டாளிகள் என்பது தெரிந்தது.

    பொது மக்கள் தாக்கியதில் ராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜி பரிதாபமாக இறந்தார். பிடிப்டட மற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடியவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
    ×